ஆளுமை:தங்கராசா, சின்னத்தம்பி

From நூலகம்
Name தங்கராசா
Pages சின்னத்தம்பி
Pages நல்லதம்பி
Birth 1954.10.29
Place மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கராசா, சின்னத்தம்பி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் பிறந்த கரகாட்டக்கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் நல்லதம்பி. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மெதடிஸ்த மிஷன் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் தொடர்ந்து மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

பாடசாலைக் காலம்முதல் கலைத்துறைில் ஈடுபாடு உடைய இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மதுரவாசகன் நாட்டுக்கூத்தில் தோழி பாத்திரமேற்று நடித்தார். அலங்காரரூப நாட்டுக்கூத்தின் (1955) மூலம் புகழ் பெற்றார். பல வடமோடி, தென்மோடி கூத்துகளிலும் சமூக சமய ஹாஸ்ய நாடகங்களிலும் நடித்துள்ளார்.

தனது 22ஆவது வயதில் 1976.04.28ஆம் திகதி கதிரவன் கலைக்கழகம் எனும் கலைசார் தாபனம் ஒன்றினை ஸ்தாபித்தார். 1976ஆம் ஆண்டு கதிகாரத்தம்பியால் அலைந்த உறவு எனும் சமூக நாடகமும் போடியார் வீட்டு கல்யாணம் எனும் நகைச்சுவை நாடகத்தையும் தயாரித்து மேடையேற்றினார்.

வருடந்தோறும் கண்ணகை அம்மன் சடங்கினை சிறப்பித்து இவருடைய கலை நிகழ்வுக்ள கிராமங்கள் தோறும் நிகழ்த்தப்படுவது வழக்கம். 18 புராண இதிகாச நாடகங்களையும் 28 சமூக நாடகங்களையும் தயாரித்து அரங்கேற்றியுள்ளார். 1989ஆம் ஆண்டு முதல் கரகாட்டம், கிராமிய நடனம் அகிய துறைகளில் பிரவேசித்தார். 1989-2008ஆம் ஆண்டு வரை 50க்கும் மேற்பட்ட கரகாட்டங்களை தயாரித்துள்ளார். 21 கரகாட்டங்கள் நீண்ட சரித்திரக்கதைகள கூறுவதாக அமைந்துள்ளது. மயில் இராவணன் சண்டை, சராசந்தன் சண்டை, ஆரவள்ளி திருமணம், அல்லி திருமணம், உருத்திரசேனன் சண்டை, பாண்டவர் வகுந்தகம், பாஞ்சாலி சபதம், குயலவன் பகாசூரன் சண்டை, தர்மபுத்திரர் ஆகியவை குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

மண்முனைப்பற்று பிரதேச சாகித்திய விழாவில் பொன்னாடை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.