ஆளுமை:தந்திராதேவி, ஜெயராஜா

From நூலகம்
Name தபேந்திராதேவி
Birth
Place யாழ்ப்பாணம்
Category சமூகசேவை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தந்திராதேவி, ஜெயராஜா யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகையில் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை புலோலி அ.மி.த.க பாடசாலையிலும், இரண்டாம் நிலைக் கல்வியை வட இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் சிறப்பு பட்டதாரியாவார். பிரதேச அபிவிருத்தி திட்டமிடலில் ;முதுகலைமானிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரின் கணவர் ஜெயராஜா. மூன்று பிள்ளைகளின் தாயாராவார். யாழ் மற்றும் வவுனிய மாவட்ட செயலகங்களில் கடமையாற்றியுள்ளார். அத்துடன் கரைச்சி செயலகத்திலும், பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும் கடமையாற்றி நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். தும்பளை கிராம மட்டத்தில் இனங்காணப்பட்ட சமூக அமைப்பான தும்பளை கருணை உள்ளம் என்னும் அமைப்பினர் பெண்களுக்கான சுயதொழில் முயற்சியான தையல்கலை, அழகுக்கலை போன்ற பயிற்சி நெறிகள், தாய், தந்தையற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், மாற்றுவலுவுடையோருக்கான உதவித்திட்டங்கள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார். அவற்றுக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி நிறுவன ரீதியாக அவர்கள் வளர்ச்சியடைய ஊக்கப்படுத்தி வருகிறார்.

படைப்புகள்

  • [[ ]]