ஆளுமை:தஸ்னீம், ஹயாத்து முகைதீன்

From நூலகம்
Name தஸ்னீம்
Pages ஹயாத்து முகைதீன்
Pages ஆமீனா உம்மா
Birth 1985.07.11
Place சம்மாந்துறை
Category
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தஸ்னீம், ஹயாத்து முகைதீன் மட்டக்களப்பில், சம்மாந்துறையில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை ஹயபாடர் முகைத்தீன்; தாய் ஆமீனா உம்மா. சம்மாந்துறை மகளிர் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற இவர் இடைநிலைக் கல்வியை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்டார். 2004ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழத்தின் சட்ட பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு 2009ஆம் ஆண்டு சட்டமாணிக் கற்கை நெறியை அதி விசேட திறமைச் சித்தியுடன் நிறைவு செய்து கொழும்புப் பல்கலைக்கழத்தினால் வழங்கப்படும் சர்வதேச சட்டத்துக்கான சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையின் முதற் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவர் தஸ்னீம் ஹயாத்து முகைதீன் அவர்கள். 2010ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 2009ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழத்தில் மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவக் கற்கை நெறியையும் நிறைவு செய்துள்ளார். முல்லைத்தீவுக்கான முதலாவது சட்ட உத்தியோகத்தர் பதவி 2010ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இவரின் திறமையின் காரணமாக நோர்வேயின் அகதிகள் பேரவையின் சிபார்சுக்கு இணங்க சட்ட ஆலோசகராக பதவி உயர்த்தப்பட்டார்.2012ஆம் ஆண்டு இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக பதவியேற்ற இவர் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் மேல் நீதிமன்றங்களிலும் மாவட்ட நீதிமன்றங்களிலும் தொழில் நியாய சபைகளிலும் அரசைப் பிரதிநிதித்துவம் செய்து சிவில் மற்றும் சிவில் மேற்முறையீட்டு நீதிமன்றங்களில் பணி புரிந்துள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சம்மாந்துறை நீதிமன்றத்திலும் கல்முனை நீதிமன்றத்திலும் தனியார் சட்டத்தரணியாக கடமை புரிந்துள்ளார். 2016ஆம் ஆண்டு நீதிபதிகளுக்கான பரீட்சையில் இலங்கையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டு முதலாவது நியமனத்தை கொழும்பு கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவானாகவும் பெற்றார். இவரின் கணவர் டொக்டர் தம்பிலெப்பை ஆவர். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.