ஆளுமை:தேனுசன், கண்ணன்

From நூலகம்
Name தேனுசன்
Pages கந்தையா
Pages சூரியகலா
Birth 2001.03.26
Place கிளிநொச்சி, உருத்திரபுரம்
Category இலங்கை உதைபந்தாட்ட வீரன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேனுசன், கண்ணன் அவர்கள் (2001.03.26 ) இல. 105 குடிமத்தி உருத்திரபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை கண்ணன்; தாய் சூரியகலா. இவர் இலங்கையின் பிரிவு 19 உதைபந்து தேசிய அணியில் 11 வீரர்களில் ஒருவராக களம் கண்ட தமிழ் வீரன் ஆவார். இவர் ஆரம்ப கல்வி தொடக்கம் உயர் கல்விவரை கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் கற்றார்.

இவர் உதைபந்து விளையாட்டில் அதீத ஈடுபாடு கொண்டவராக காணப்பட்டார். அதன் நிமித்தம் 2013 ஆம் ஆண்டு தனது பாடசாலை முதல் போட்டியில் களம் கண்டார். அவர் படிப்பின் மீது கொண்ட பற்றினை விட உதைபந்து மேல் அதிகமான அக்கறை காட்டினார். உதை பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியநோக்குடன் பிரதீஸ் என்பவரிடம் பயிற்சி பெற்றார். இவர் இளம் வயதிலேயே உருத்திரபுர கழகத்தில் இணைந்தார். அவரது வேகம் மற்றும் பந்தினை நகர்த்தும் விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. வடக்கு, கிழக்கு உதைபந்தாட்ட சுற்று போட்டி இடம்பெற்றது. இது தெற்காசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணப்பரிசு கொண்ட போட்டியாகும். இதில் அயல் நாட்டு வீரர்களும் ஏல அடிப்படையில் எடுக்கப்பட்டனர். இதில் 18 வயதே ஆன தேனுசன் கிளியூர் கிங்ஸ் என்னும் கிளிநொச்சி மண் சார்ந்த அணிக்காக களம் கண்டார். அதில் நட்சத்திர வீரராக கிளியூர் கிங்ஸ் அணியில் ஜொலித்தார். மற்றும் அம்பாறை அவெஞ்சர்ஸ் மற்றும் நோர்த் லாண்ட் அணிக்கெதிராக கோல்களை போட்டு ஆட்ட நாயகனாக திகழ்ந்தார். இறுதிப் போட்டியிலும் இவர் தனது திறமையைக் காட்டினார்.

2018 ம் ஆண்டு கொழும்பில் 19 வயது பிரிவு இலங்கையணிக்கான தெரிவு இடம்பெற்றது. இதற்கு இவருக்கும் அழைப்பு கிடைக்கப்பெற்றது. சுமார் 200 க்கும் அதிகமான வீரர்கள் பங்கு பற்றினார்கள். இதில் 30 வீரர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டார்கள். அதில் தமிழ் வீரராக தேனுசன் கிளிநொச்சி மண்ணின் பெருமையை உலகறியச் செய்தார்.

இவர் கட்டார், துர்க்மனிஸ்தான் ,ஜெர்மன், இந்தியா ,பங்களாதேஷ், மலேசியா, மங்கோலியா போன்ற நாடுகளுடன் நடைபெற்ற போட்டிகளில் 11 வீரரில் ஒருவராக களம் கண்டார். 2018 ம் ஆண்டு வன்னி சமர் போட்டியிலே உருத்திரபுரம் அணிக்காக அதிக கோல்களை போட்டு இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்றார். அது மட்டுமன்றி கிளிநொச்சி பான் ஏசியா வங்கி நடாத்தியா சுற்றுப்போட்டியில் தொடர் ஆட்ட நாயகனாகவும் திகழ்ந்தார்.