ஆளுமை:நடராசா, பாலாம்பிகை

From நூலகம்
Name பாலாம்பிகை
Pages -
Pages -
Birth -
Pages 2012.05.25
Place மட்டக்களப்பு
Category ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலாம்பிகை, நடராசா மட்டக்களப்பில் பிறந்து எழுத்தாளர். வீணையும் வாய்பாட்டும் முறையாக பயின்றுள்ளார். சமயப் பேச்சுக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சமய கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இலங்கை வானொலிக்காக பல இசை நாடகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய வெண்பனியாளும் ஏழு குள்ளர்களும் என்ற தலைப்பிலான நாட்டிய நாடகம் பின்னர் மேடை நாடகமாக பல மேடைகள் கண்டது. இலங்கை வானொலியில் வில்லுப்பாட்டு, இசைச்சித்திரம், அறிநெறி, உரைச்சித்திரம் எனப் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ”ரஞ்சிதம்” என்ற துப்பறியும் நாடகத்தை கிருஷ்ணா என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார். நாட்டிய ஆசிரியர்களுக்கு நாட்டிய நாடங்களை எழுதிக் கொடுத்துள்ளார். இவர் எழுதிய வானொலி நாடங்களின் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் பெற்ற விருதுகள் • சங்கீதஜோதி ரத்னா (ரிசிகேஸ் சிவானந்த சரஸ்வதி) • வீணாகான வித்தகி (இலங்கை பிரதேச அபிவிருத்தி அமைச்சு) • கலாஜோதி (இந்து கலாசார திணைக்களம், 1994) • சாயி கான கலா பூஷ்ண சரஸ்வதி (கொழும்பு சத்திய சாயி நிலையம்)