ஆளுமை:பரராசசிங்கம், தர்மலிங்கம்

From நூலகம்
Name பரராசசிங்கம்
Pages தர்மலிங்கம்
Pages இராசம்மா
Birth 1951.10.10
Place யாழ்ப்பாணம், நீர்வேலி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரராசசிங்கம், தர்மலிங்கம் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ஆளுமை. இவரது தந்தை தர்மலிங்கம்; தாய் இராசம்மா. நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். பாடசாலைக் காலத்திலேயே பேச்சுத்துறை, எழுத்துத்துறை, கவியாக்கம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டார். அத்துடன் இப்பருவத்திலேயே ஐக்கிய மேற்பார்வை சங்கம் நடத்திய ஐக்கியதீபம் சஞ்சிகையில் கட்டுரைகள், கவிதைகள் எழுதிப் பாராட்டை பெற்றார்.

மல்லாகம் விசாலாட்சி முன்பள்ளி, நீர்வேலி காமாட்சியம்பாள் முன்பள்ளி, நீர்வேலி ஸ்ரீ பகவான் முன்பள்ளி என்பனற்றுக்கு சிறுவர்களுக்கான முன்பள்ளி கீதங்களை இயற்றி வழங்கினார். 2000ஆம் ஆண்டு புகழ்பூத்த நீர்வேலி என்னும் நூலை வெளியிட்டுள்ளார். 2005ஆம் ஆண்டு மனித வாழ்வில் சடங்குகள் என்ற நூலையும் 2006ஆம் ஆண்டு அறிவுச் செல்வங்கள் என்ற நூலையும் வெளியிட்டார்.

2010ஆம் ஆண்டு அச்சுவேலி பத்தைமேனி வடபத்திரகாளி திருவூஞ்சல் பதிகம், 2012ஆம் ஆண்டு தெல்லிப்பளை தரமண் கலட்டிப் பிள்ளையார் கோவில் திருவூஞ்சல் பதிகம் பாடிய பாடிய பெருமைக்குரியவர். 2014ஆம் ஆண்டு புகழ்பூத்த நீர்வேலி நூலின் இரண்டாவது பதிப்பாக வெளியிட்டார்.

விருதுகள்

பாவலன் கௌரவபட்டம் – தெல்லிப்பளை தரமண் கலட்டிப் பிள்ளையார் கோவில் நிர்வாகம். நீர்வைக்குரிசில் – நீர்வேலி கலைப்பண்பாட்டுக் கழகம் 2011.


Resources

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 88