ஆளுமை:பரீதா, இஸ்மாயில்

From நூலகம்
Name பரீதா
Pages அஹமது லெப்பை போடி
Pages மரியம் பீவி
Birth
Place சம்மாந்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரீதா, இஸ்மாயில் அம்பாறை சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அஹமது லெப்பை போடி; தாய் மரியம் பீவி. இவர் ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரத்தை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகளும் சமாதானமும் என்ற பாடநெறியையும், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் வியாபார முகாமைத்துவக் கல்வியையும் அதே தொழில்நுட்பக் கல்லூரியில் பூ வேலை தையல் துறை தொடர்பான டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார். இவர் ஓர் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சிக்கு கட்டுரை கவிதை எழுதி வந்துள்ளார். எழுத்துத் துறை பிரவேசத்திற்கு இதுவே தூண்டுகோலாக அமைந்துள்ளது. சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம் எழுதுவதென பன்முகத் திறமைகளை கொண்டவர் எழுத்தாளர். இவரின் ஆக்கங்கள் வானொலியின் முஸ்லிம் சேவையின் மாதர் மஜ்லிஸ், நெஞ்சோடு நெஞ்சம், இளைஞர் இதயம் போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

இவரால் எழுத்தப்பட்ட மட்டக்களப்பு நாட்டார் பாடல் என்ற விவரணச் சித்திரம் இலங்கை ரூபவாஹினியின் வளர்பிறை நிகழ்ச்சியில் 1990ஆம் ஆண்டு ஒளிபரப்பானதைத் தொடர்ந்து ஒரு பெண் கலைஞராகவும் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் கலைஞர் தேர்வில் சித்தி பெற்ற ஒரு வானொலி கலைஞராவார். பரீதா தனது பாடசாலை காலங்களில் பல பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார். அல்-அமானா பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம் எனும் அமைப்பை உருவாக்கி சிறப்பாக நடாத்தி வருகிறார்.

விருதுகள்

சமூக பராமரிப்பு மையம் விருது 2008ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தின நிகழ்வில் வழங்கப்பட்டது.

சாஹித்திய விருது – 2009, 2012, 2013ஆம் ஆண்டுக்கான விருதை சம்மாந்துறை பிரதேச செயலக பிரதேச கலை கலாசார பேரவை இவருக்கு வழங்கியது.

சர்வதேச மகளிர் தின விருது -2012 அம்பாறை மாவட்ட செயலகம்.

இலங்கை மனித அபிவிருத்தி நிறுவனம் பலமுறை இவரை கௌரவித்துள்ளது.

கலாபூஷணம் அரச விருது -2014ஆம் ஆண்டு.