ஆளுமை:பரீனாலை

From நூலகம்
Name பரீனாலை
Birth
Place
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரீனாலை ஓர் திரைப்படக் கலைஞர். இவர் 50 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது திரைப்படப் பிரவேசம் 1970 ஆம் ஆண்டு வெளியான மஞ்சள் குங்குமம் என்ற படத்தில் முதன் முதலில் சுபரே நடனமாடியதன் மூலம் ஆரம்பமாகியது. இவர் காமினி பொன்சேகாவின் உதவியுடன் மல்கெகுல, சிங்சிங்நோனா, உதுமானனி, நில்லசொய, தவலம, அலிபபா 40 ஹொரு, சருங்கலே உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்த்திரை உலகில் நடன நடிகையாக அறிமுகமான இவரைத் தமிழ்ப் பட கதாநாயகியாக உயர்த்திய பெருமை வி.பி.கணேசனையே சாரும். மேலும் இவர் இலங்கை, இந்தியா, மலேசியா கூட்டுத்தயாரிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 153-156