ஆளுமை:பவானி, அருளையா

From நூலகம்
Name பவானி
Pages அருளையா
Pages சிவகாமசுந்தரி
Birth 1977.01.01
Place புங்குடுதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பவானி, அருளையா (1977.01.01 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. இவர் வேம்படி மகளிர் கல்லூரியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் கல்வி கற்று மருத்துவராகப் பணிபுரிகின்றார். இவர் ஆகர்ஷியா என்ற புனைபெயரில் அறியப்படுவர்.

இவர் 13 ஆவது வயதில் எழுதத் தொடங்கினார். இவரது கவிதைகள், கட்டுரைகள் சரிநிகர், சக்தி, வைகறை, தலித், நான் போன்ற இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது கவிதைகளின் தொகுப்பான ‘நம்மைப் பற்றிய கவிதை’ (2007) காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது.

Resources

  • நூலக எண்: 1205 பக்கங்கள் 1