ஆளுமை:பாத்திமா சுபியானி, பாரூக்

From நூலகம்
Name சுபியானி
Pages முகம்மது பாரூக்
Pages சித்தி சாபிரா
Birth 1979.10.26
Place புத்தளம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமான சுபியானி, பாரூக் புத்தளத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முகம்மது பாரூக்; தாய் சித்தி சாபிரா. ஆரம்பக் கல்வியை புத்தளம் ஸாஹிரா பாலர் பாடசாலை, உயர் கல்வியை பாத்திமா முஸ்லிம் பெண்கள் பாடசாலை ஆகியவற்றில் கற்றார். புத்தளம் நகரசபையின் லேக் நூல்நிலையத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி வருகிறார்.

எழுத்துத்துறையிலும் ஓவியத்துறையிலும் திறமை கொண்டவர். இவரின் ஆக்கங்கள் கட்டுரை, மருத்துவம், நகைச்சுவை, கல்வி, சமயம், பெண்கள் நலன், சமையல், பெண்ணுரிமை தொடர்பாக வெளிவந்துள்ளன. பாத்திமா சுபியானியின் ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, செந்தூரம், நவமணி, மின்னல், தினப்புயல், அரும்பு, சுடர்ஒளி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவரின் ஓவியங்கள் சஞ்சிகைகளின் முகப்பு அட்டைகள், கருத்தோவியங்கள் வரைவதில் ஈடுபாடு கொண்டவர்.