ஆளுமை:பார்வதிநாதசிவம், மகாலிங்கசிவம்

From நூலகம்
Name பார்வதிநாதசிவம்
Pages மகாலிங்கசிவம்
Birth 1936.01.14
Pages 2013.03.05
Place மாவிட்டபுரம்
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பார்வதிநாதசிவம், மகாலிங்கசிவம் (1936.01.14 - 2013.03.05) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை மகாலிங்கசிவம். இவர் ஆரம்பக் கல்வியை வீமன்காமம் மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியைத் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்று யாழ்ப்பாணம், மருதனார்மடம் இராமநாதன் கல்விக்கழகத்தில் ஆசிரியர் பணியை ஆரம்பித்துக் கண்டி புனித அந்தோனியார் கல்லூரி உட்படப் பல பாடசாலைகளில் பணியாற்றினார். 1955 ஆம் ஆண்டு முதல் இலக்கியப் பணியை ஆரம்பித்த இவர், தென்னிந்திய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.

இவர் சுதந்திரன், ஈழநாடு, உதயன், முரசொலி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். இவர் காதலும் கருணையும், இரு வேறு உலகம், இரண்டு வரம் வேண்டும், இன்னும் ஒரு திங்கள், பசிப்பிணி மருத்துவன், மானங்காத்த மறக்குடிவேந்தன், தமிழ்ச்செல்வம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவர் வித்துவசிரோன்மணி பொன்னம்பலம்பிள்ளையிடம் உரையாசிரியர் என்ற பட்டத்தையும் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியிடம் இலக்கிய மேதை என்ற பட்டதையும் பெற்றுக் கொண்டதுடன் கலாபூஷணம், ஆளுநர் விருதுகளையும் பெற்றார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 20
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 122-125
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 39
  • நூலக எண்: 8716 பக்கங்கள் 26-28