ஆளுமை:பாலசிங்கம், குமாரசாமி

From நூலகம்
Name பாலசிங்கம்
Pages குமாரசாமி
Pages -
Birth 1942
Place ஞானி மடம்
Category இசைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசிங்கம், குமாரசாமி (1942 -) கிளிநொச்சி, ஞானிமடத்தை பிறப்பிடமாகக் கொண்ட இசைக்கலைஞர். இவரது தந்தை குமாரசாமி. பாடசாலை காலத்தில் கோவலன் கண்ணகி, குமணன் போன்ற நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். கலையார்வம் மிக்கவராக திகழ்ந்த இவர் பிற்பட்ட காலத்தில், அமரத்துவம் அடைந்துவிட்ட துரைசாமி அண்ணாவி, விசுவலிங்கம் அண்ணாவி என்போரின் கூத்துக்களுக்கு பிரதானமான பிற்பாட்டுக் காரராகவும் இருந்துள்ளார்.

பொம்மல் ஆட்டத்திற்கான பொம்மைகளை கட்டுவதில் இவரது தந்தை சிறப்பானவராய் இருந்துள்ளார். அவர் இறந்த பிற்பாடு இவரே அந்த பொம்மைகளை கட்டியும் வந்துள்ளார். இவரது தந்தை - முருக்கத்செத்தல் (தலை), முடிமயிர் (முடி), கீறுதல் (கண்), தகரகம் (மூக்கு), நொங்கு அல்லது பனங்காய் பருமள் (காது), ஈச்சம் கயங்கு (உடம்பு) , கோயில் குடை சேலை (ஆடை) ஆகிய பொருட்களைப் பயன்படுத்தியும், இவர்- ஒல்லித் தேங்காய் (தலை), சாயம் பூசப்பட்ட சணல் அல்லது நூல் (முடி), மாபிள் போலை (கண்), தகரம் (காது), தகரம் (மூக்கு), தென்னமட்டை (உடம்பு), வீட்டுச்சாறி (ஆடை) என்பவற்றை பயன்படுத்தியும், மக்களின் பொழுதுபோக்கிற்காகவும், மகிழ்வூட்டலுக்காகவும் பொம்மலாட்ட நிகழ்வினை கோயில்களிலும் பொது விழாக்களிலும் நிகழ்த்தி வந்ததாகவும் கூறுகின்றார்.

தனது தந்தையார் தன்னை ஐந்து,ஆறு வயது சிறுவனாக இருந்தபோது நாடகங்கள் பார்க்க அழைத்து சென்றதாகவும் கூறுகின்றார். என்ர அப்பு என்னை நாடகத்திற்கு கூட்டிக் கொண்டு போனபோது சொன்னார் தம்பி இப்பதான் இந்த லைட்டுகளும்,சீன்களும். அந்தக் காலத்தில் வட்ட குடில் போட்டு சிரட்டையில் எண்ணெய் ஊற்றி பந்தம் கொளுத்தி அந்த வெளிச்சத்தில் தான் நாடகம் படித்தும், நடித்தும் வந்ததாக கூறினார். இக் கலைப் பூர்வீகத்தையும், பழமையான பாரம்பரியத்தையும், ஆதாரமாக கொண்டு இந்த தகவலை வரலாற்றுப் பதிவாக இங்கு குறிப்பிடுகிறேன்.

தற்போது தனது தந்தை செல்லப்பா துரைசாமி பராமரித்து வந்த வைரவர் கோயிலினை இவர் பராமரித்து பூசை செய்து வருகின்றார்.