ஆளுமை:பாலசுந்தரம், எஸ்.
Name | பாலசுந்தரம் |
Birth | |
Place | கலட்டி, நாச்சிமார் கோவிலடி |
Category | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலசுந்தரம், எஸ் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த ஓவியர். அச்சுக்கூடம் ஒன்றில் பணியாற்றிய இவர், இயற்கைக்காட்சி ஓவியங்களைச் சிறப்பாக வரையும் ஆற்றல் கொண்டவராவார். ஓவியர் இராசரத்தினத்தின் தகவலின் படி இவரது ஓவியங்கள் பணிக்கரின் பாணியைப் பின்பற்றி அமைந்தவையாகும். இன்று இவரது இரு ஓவியங்களின் புகைப்படப் பிரதிகள் மட்டுமே பார்வைக்குக் கிடைத்துள்ளன.
இவர் மிகவும் கஷ்டப்பட்டுத் தன்னியல்பிற்கு மீறிய பொருட்செலவில் தனிநபர் ஓவியக் காட்சியொன்றை யாழ். இந்துக் கல்லூரியில் செய்தார். ஆனாலும் யாழ்ப்பாணத்தவரின் இயல்பான அசட்டையினால் இக்காட்சிக்கு அதிகம் வரவேற்பு இருக்கவில்லை. இதனால் மனம் நொந்து போன இவர், கலைஞனை மதிக்கத் தெரியாத யாழ்ப்பாண மண்ணில் தொடர்ந்தும் சீவிக்க விரும்பாது தனது உடமைகள் அனைத்தையும் விற்று விட்டு, கொழும்புக்குக் குடியேறி தான் இறக்கும் வரை யாழ்ப்பாணம் வரவேயில்லை என அறிய முடிகிறது.
கொழும்பில் குடியேறியபின் தனிநபர் ஓவியக் காட்சிகளை ஏற்பாடு செய்து புகழ் பெற்றார் .இவரது ஓவியங்களை வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் பலரும் விலைக்கு வாங்கிச் சென்றதால் நல்ல வருமானத்தைப் பெற்றார்.
Resources
- நூலக எண்: 2970 பக்கங்கள் 13