ஆளுமை:பிர்தௌசியா, எஸ்.எல்

From நூலகம்
Name பிர்சௌசியா
Pages சுலைமா லெவ்வை
Pages றசீனா
Birth 1979.03.04
Place சம்மாந்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிர்தௌசியா, எஸ்.எல் (1979.03.04) அம்பாறை சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சுலைமா லெவ்வை; தாய் றசீனா. ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணி பட்டதாரியான இவர் முதுகலைமாணி பட்டத்தில் (Master of Journalism) பயின்று வருகிறார். பெண்கள் கிராமிய அபிவிருத்தியில் டிப்ளோமா கற்கையும், இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியில் பட வரைதல் கற்கையும், நிறுவனத்தில் இணைந்து இளைஞர் முயற்சியாண்மைப் பயிற்சியினையும் பெற்றுள்ளார். சிங்களம் மற்றும் கணினி துறைகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளார். கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுதல், இலக்கியம், அறிவிப்பு என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். 2016ஆம் ஆண்டு தேசிய இலக்கிய விழாவில் உண்மை உயர்வு என்ற சிறுவர் கதைக்கு முதலாம் இடத்தை இவர் பெற்றார்.

விருதுகள்

சம்மாந்துறையில் பெண் ஆளுமை எழுத்தாளர் கௌரவிப்பு 2019ஆம் ஆண்டு.

சுவதம் விருது 2017ஆம் ஆண்டு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டது.

குறிப்பு : மேற்படி பதிவு பிர்தௌசியா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.