ஆளுமை:புஷ்பராசா, சண்முகம்
From நூலகம்
| Name | புஷ்பராசா |
| Pages | சண்முகம் |
| Birth | 1950.04.12 |
| Place | அரியாலை |
| Category | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
புஷ்பராசா, சண்முகம் (1950.04.12 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சண்முகம். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற இவர், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றார். இவர் நடுப்பு, நாடக எழுத்துருவாக்கம், நெறியாள்கை, சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவர்.
இவர் சகுந்தலை, திருமாவளவன், கொஞ்சும் குமரி ஆகிய சரித்திர நாடகங்களையும் கண்ணாடி, தலைத் தீபாவளி, வசந்த வாழ்வு, தொடர்ந்த கதை முடிவதில்லை, புன்னகையின் புயல், நிமிடங்கள் நினைக்கின்றன போன்ற சமூக நாடகங்களையும் எழுதியதோடு அவற்றை நெறியாள்கை செய்து நடித்துமுள்ளார். இவற்றில் பயணங்கள் முடிவதில்லை என்னும் வசனங்களற்ற மெளன நாடகம் பலமுறை மேடையேற்றப்பட்டதோடு பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
Resources
- நூலக எண்: 7571 பக்கங்கள் 174
- நூலக எண்: 15444 பக்கங்கள் 199