ஆளுமை:புஸ்பநாதன், வீரசிங்கம்

From நூலகம்
Name புஸ்பநாதன்
Pages வீரசிங்கம்
Pages பரமேஸ்வரி
Birth 1977.05.12

இறப்பு =-

Place RV-4, தங்கநகர், சேருவில , திருகோணமலை
Category வேட மதகுரு (கப்புறாளை)
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீரசிங்கம் புஸ்பநாதன் (1977.05.12) இவர் RV-4, தங்கநகர் - சேருவில - திருகோணமலையைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த வேடக்கப்புறாளை ஆவார். இவரது தந்தை வீரசிங்கம்;தாய் பரமேஸ்வரி. இவரது மனைவியின் பெயர் அஜந்தா. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது பாடசாலைக் கல்வியினை ஆறாந்தரம் வரைக்கும் தங்கநகர் சம்பகவல்லி தமிழ் வித்தியாலயத்தில் கற்றுள்ளார். நாட்டில் இடம் பெற்ற ஈழப்போராட்டத்தில் பங்கு கொண்டதோடு, தனது ஒரு கையினை இழந்தவராக இன்று காணப்படுகின்றார். இவர் தற்காலத்தில் முழு நேர கப்புறாளையாகக் காணப்படும் அதே வேளை பருவ காலங்களில் தேன் வேட்டைக்கும் சென்று வருகின்றார். இவரின் நோய் நீக்கல் சேவையானது மாவட்டங்கள் தாண்டியும் இன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் இவர் தற்காலத்தில் காணப்படுகின்ற குறித்த பூர்வகுடிகளின் சமூகத்தின் பல்லாளுமை கொண்டவராகக் காணப்படுகின்றார்.