ஆளுமை:பேகம் சுபைதானி, அப்துல் காதர்

From நூலகம்
Name பேகம் சுபைதா
Birth
Place நாவலப்பிட்டி ஹல்கர்னோயா
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேகம் சுபைதானி, அப்துல் காதர் நாவலப்பிட்டி ஹல்கர்னோயா என்ற ஊரைச் சேர்ந்த எழுத்தாளர். இலங்கையில் வெளிவந்த முதலாவது தமிழ்மொழி சஞ்சிகையான கலைமலர் சஞ்சிகையை ஒரு முஸ்லிம் பெண்ணால் வெளியிடப்பட்டது என்ற பெருமை இவருக்குரியது. 1960ஆம் ஆண்டளவில் இந்த சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். பல மலையக பெண் எழுத்தாளர்கள் இச்சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எழுதியுள்ளனர். தனது சொந்த முயற்சியுடன் இச் சஞ்சிகையானது வெளிகொண்டு வரப்பட்டாலும் போதிய பொருளாதாரம் இல்லாமையால் இடைநடுவே நிறுத்தப்பட்டது. இவரின் இச்சஞ்சிகை இலக்கிய ஆர்வலர்கள் பலரால் மிகவும் பாராட்டப்பட்டது.