ஆளுமை:பேனாட், ஆமோஸ்

From நூலகம்
Name பேனாட்
Pages ஆமோஸ்
Pages -
Birth 1988.09.11
Place கிளிநொச்சி
Category நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேனாட், ஆமோஸ் (1988.09.11 -) கிளிநொச்சி தருமபுரத்தை சேர்ந்த நாடகக்கலைஞர். இவர் தனது ஆரம்ப கல்வியையையும் உயர் கல்வியையும் கிளி/தருமபுரம் மத்திய கல்லூரியிலும் இடை நிலை கல்வியை பண்டாரவளை ஊவா கைலன் மகா வித்தியாலயத்திலும் கற்றவர்.

இவர் கெயார், வேள்ட் விஷன் போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களாலும், முல்லைதீவு மாவட்ட செயலக கலாசார பிரிவுகளாலும், வன்னிப்பிரதேசம் எங்கும் நடத்தியிருந்த விவாத அரங்குகளில் பங்கு பற்றியிருந்தார். இவர் தற்போது கொழும்பு அபின அக்கடமியில் கற்பித்து வருகின்றார்.

இவர் யோகச் சாரிகா பட்டத்தினை பெற்றுக் கொண்டார். கொவிசெத்த அதிஸ்ட லாபச்சீட்டு விளம்பரங்களில் நடித்து வரும் இவர் குறும்பட முயற்சிகளிலும் கிற்றார் வாத்தியம் வாசிப்பதிலும் ஓரளவு பரீட்சியம் உடையவராகவும் விளங்குகின்றார்.


Resources

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 61-62