ஆளுமை:பொன்னையா, கார்த்திகேசு
Name | பொன்னையா |
Pages | கார்த்திகேசு |
Pages | கதிராசிப்பிள்ளை |
Birth | 1907 |
Pages | 1981.01.08 |
Place | வேலணை |
Category | இலக்கியவாதி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னையா, கார்த்திகேசு (1907 - 1981.01.08) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவகர், இலக்கியவாதி, நாட்டுப் பற்றாளர், நடுவர். இவரது தந்தை கார்த்திகேசு; தாய் கதிராசிப்பிள்ளை. இவர் தீரர் பொன்னையனார் என அறியப்பட்டார். இவர் வேலணை ஐக்கிய பண்டகசாலை முகாமையாளராகவும் பலநோக்குச் சங்க முகாமையாளராகவும் கடமை புரிந்துள்ளார்.
இவரின் மேற்பார்வையின் கீழ் சரஸ்வதி வித்தியாசாலை புதுப்பிக்கப்பட்டு மேலதிகக் கட்டிடங்களும் கட்டப்பட்டன. இவர் 1935 இற்குப் பின்னர் தமிழ்நாடு பலசகாய நிதியச் சங்க நிரந்தர உறுப்பினராகவும் தீவுப்பகுதி ஐக்கிய நாணய சங்கப் பிரதிநிதியாகவும் இருந்து மக்களுக்கு உதவிகளைச் செய்ததோடு, அந்தக் காலத்தில் குடிசன மதிப்பீடு செய்வதற்காகத் தெரிவாகித் திறம்படச் செய்து, சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.
இவர் வேலணை கிழக்கில் அரச பாடசாலை ஒன்றை நிறுவ எண்ணி, அதற்காகத் தன்னுடைய காணியை நன்கொடையாகக் கொடுத்துப் பலரது உதவியோடு அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலையாக வேலணை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் இயங்க வைத்தார். இன்று இப்பாடசாலை வேலணை கிழக்கு மகா வித்தியாலயமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் வேலணை கிழக்கு பெருங்குளம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் சிறப்பாக அமையப்பாடுபட்டவர்களில் ஒருவராவார்.
Resources
- நூலக எண்: 4640 பக்கங்கள் 532-536