ஆளுமை:முகம்மது உவைஸ், மகமூது லெப்பை
Name | முகம்மது உவைஸ் |
Pages | மகமூது லெப்பை |
Pages | சைனம்பு நாச்சியார் |
Birth | 1922.01.15 |
Pages | 1996.03.25 |
Place | பாணந்துறை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மது உவைஸ், மகமூது லெப்பை (1922.01.15 - 1996.03.25) பாணந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மகமூது லெப்பை: தாய் சைனம்பு நாச்சியார். இவர் ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையிலும் சரிக்கமுல்லை தக்சலா வித்தியாலயத்திலும் பாணந்துறை அர்ச். யோவான் கல்லூரியிலும் கல்வி கற்று 1946 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
இவர் இஸ்லாமும் இன்பத்தமிழும், இஸ்லாமியத் தென்றல், நம்பிக்கை, ஞானசெல்வர் குணங்குடியார், நீதியும் நியாயமும், நெஞ்சில் நிறைந்த சுற்றுலா (பயணக் கட்டுரை), இஸ்லாம் வளர்த்த தமிழ், தமிழ் இலக்கியம், அரபுச் சொல் அகராதி, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களின் வரலாறு, இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் வரலாறு, சூபி மெய்ஞ்ஞானிகளின் வரலாறு, அரபுத் தமிழ் இலக்கியம் பற்றிய வரலாறு, இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய வசன நூல்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளதோடு மேலும் பல நூல்களை மொழிபெயர்ப்புயும் செய்துள்ளார்.
வெளி இணைப்புக்கள்
Resources
- நூலக எண்: 955 பக்கங்கள் 81-88