ஆளுமை:முத்தையா, க. பே.

From நூலகம்
Name முத்தையா
Birth 1914.08.31
Pages 1964.05.26
Place வல்வெட்டித்துறை, உடுதுறை
Category
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்தையா, க. பே (1914.08.31 - 1964.05.26) யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுதுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், இலக்கிய ஆர்வலர், பத்திரிகையாளர், நற்செய்தித் திருத்தொண்டர், தொழிற்சங்கவாதி. இவர் நல்லூர் சாதனா பாடசாலையில் தலைமையாசிரியராக இருந்த காலத்தில் தனது ஐம்பதாவது வயதில் காலமானார்.

இவர் யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாச வெளியீடான “சமூகத்தொண்டன்” மாத இதழுக்கு ஆசிரியராக இருந்து செயற்பட்டதோடு 1948-1954 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி தமிழ்ப் பாடசாலை தலைமையாசிரியராகப் பணியாற்றினார். இவர் சமூகத்தொண்டன் மாத இதழின் மூலம் பல இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியதுடன் பல பேச்சாளர்களையும் உருவாக்கினார். இவர் உடுத்துறை திருச்சபையின் “விசித்திர சரித்திரம்”, “பாலர் நேசன்” பத்திரிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 11

வெளி இணைப்புக்கள்