ஆளுமை:மும்தாஸ் ஹபீள்

From நூலகம்
Name மும்தாஸ் ஹபீள்
Birth 1970.05.18
Place வெலிகம
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மும்தாஸ் ஹபீள் (1970.05.18 - ) வெலிகமையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் G.A.Q. கல்வித் தகைமை பெற்றுள்ளார். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பக்தி, எழுத்து, ஓவியம், நாடகம், சினிமா, நடனம், இசை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது படைப்புக்கள் தினகரன், தினக்குரல், வீரகேசரி, ஆதவன், நவமணி, ஞானம், மல்லிகை ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும் நடித்தும் உள்ள இவர், நாடகமும் அரங்கியலும் பாடநெறியில் உயர்தரச் சித்தியடைந்து நாடகங்களுக்கு நடிகர்களைப் பயிற்றுவித்தும் தொனிப்பாடல்களை இயற்றி இசையமைத்தும் பல மேடை நாடகங்களை எழுதி தயாரித்தும் நடித்துள்ளார்.

இவர் பிரதேச சாகித்திய விருது, தேசிய சமாதன சாகித்திய விருது, தேசிய சாகித்திய பிரசாதினி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1025 பக்கங்கள் 13