ஆளுமை:யசோதரன், சின்னத்துரை

From நூலகம்
Name யசோதரன்
Pages சின்னத்துரை
Birth 1973.05.09
Place நல்லூர்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யசோதரன், சின்னத்துரை (1973.05.09 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறி ஆசிரியப் பணியாற்றுகின்றார். இவர் 1993 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை மரபுவழி நுட்பங்களைப் பின்பற்றிப் பல ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்ததுடன் 1998 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நவீன முறையில் பல நூற்றுக் கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.

கவிதை எழுதுவதிலும் ஆற்றல் கொண்ட இவரை, 1991 ஆம் ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் கவிஞர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. இவருக்கு யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் பிரதேச பண்டிதர் என்னும் திவ்ய நாமத்தைச் சூட்டிக் கௌரவித்தது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 198