ஆளுமை:யோகா யோகேந்திரன்

From நூலகம்
Name யோகா யோகேந்திரன்
Pages வேலுப்பிள்ளை
Pages இராசாம்மா
Birth 1946.01.01
Place அம்பாறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகா யோகேந்திரன் (1946.01.01) அம்பாறை திருக்கோயிலில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் இராசாம்மா. ஆரம்பக் கல்வியை திருக்கோவில் குமர வித்தியாலயத்திலும் உயர்கல்வியை தம்பிலுவில் மகாவித்தியாலயத்திலும் கல்வி கற்றுள்ளார். எழுத்தாளர் யோகா யோகேந்திரன் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி பாடசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார். யோகா கோகேந்திரன் தனது எட்டாம் வகுப்பிலேயே எழுத்துத் துறைக்கு பிரவேசித்துள்ளார். இவரின் முதலாவது சிறுகதை இராதா எனும் பெயரில் வெளிவந்ததாகத் தெரிவிக்கின்றார். சிறுகதை, நாவல், கவிதை, சிறுவர் இலக்கியம் என பன்முகங்களைக் கொண்ட சிறந்த எழுத்தாளர். சிறு வயது முதல் இவர் எழுதிய பல ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சிந்தாமணி போன்ற நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. இவரின் சிறுகதைகள் பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விருதுகளையும் பரிசில்களையும் பெற்றுள்ளன. மீண்டும் ஒரு காதல்கதை எனும் நாவலுக்கு அண்மையில் கிழக்கு மாகாண சபையின் சிறந்த நாவலுக்கான பரிசும் கிடைக்கப்பெற்றுள்ளது. ”வாருங்கள் கதை படிப்போம்“ மாணவர்களுக்கு மணிக்கவிதைகள் எனும் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான இந்நூலில் இருந்து ஒரு கவிதையை இலங்கை கல்வி அமைச்சினால் ஆசிரியர் வழிகாட்டி நூலில் சேர்க்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

விருதுகள்

1. சர்வதேச பெண்கள் அமைப்பினால் சிறந்த பெண் எழுத்தாளர் விருது 2. திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு கழகத்தினால் அரியநாயகம் விருது 3. கிழக்கு மாகாணசபையால் முதலமைச்சர் விருது 4. கலாபூஷண விருது

படைப்புகள்

  • இன்னாருக்கு இன்னார் என்று (சிறுகதைத் தொகுப்பு)
  • அவள் காத்திருக்கிறாள் (சிறுகதைத் தொகுப்பு)
  • அவர்கள் அப்படித்தான் (சிறுகதைத் தொகுப்பு)
  • மீண்டும் ஒரு காதல் கதை (நாவல்)
  • மாணவர்களுக்கான மணிக்கவிதை (கவிதை நூல்)
  • தொலைத்துவிட்டோம் எத்தனையோம் (கவிதைத் தொகுப்பு)
  • வாருங்கள் கதை படிப்போம் (சிறுவர் கதைத் தொகுதி)
  • பசி தீர்க்கும் உணவே நோய் தீர்க்கும் மருந்து (நூல்)

குறிப்பு : மேற்படி பதிவு யோகா யோகேந்திரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

Resources

  • நூலக எண்: 9780 பக்கங்கள் 47-52
  • நூலக எண்: 9872 பக்கங்கள் 58-62
  • நூலக எண்: 9872 பக்கங்கள் 47-51
  • நூலக எண்: 10181 பக்கங்கள் 39-42
  • நூலக எண்: 10889 பக்கங்கள் 57-60
  • நூலக எண்: 11128 பக்கங்கள் 60-63
  • நூலக எண்: 14784 பக்கங்கள் 50-55
  • நூலக எண்: 14917 பக்கங்கள் 39-44
  • நூலக எண்: 6108 பக்கங்கள் 34-35