ஆளுமை:ரஞ்சனி, ராஜ்மோகன்

From நூலகம்
Name ரஞ்சனி
Pages பத்மநாதன்
Pages சரோஜாதேவி
Birth 09.09
Pages -
Place யாழ்ப்பாணம்
Category ஊடகவியலாளர், நடிகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரஞ்சனி, ராஜ்மோகன் யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் பிறந்துள்ளார். இவரது தந்தை பத்மநாதன்; தாய் சரோஜாதேவி. ஆரம்ப கல்வியை கொழும்பு, வெள்ளவத்தை சென் கிளயர் மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்றுள்ளார். தற்பொழுது பல விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பரங்களை எழுதுதல், விளம்பரங்களுக்கு குரல் கொடுத்தல் போன்றவற்றோடு மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறார். இவர் தேசிய தொலைக்காட்சியின் நேத்ரா அலைவரிசையின் செய்திவாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் கடமையாற்றுகிறார். 1989ஆம் ஆண்டு இலங்கை ரூபாவாஹினி தொலைக்காட்சியின் ஊடாக நாடகத்துறைக்கு ரஞ்சனி ராஜ்மோகன் பிரவேசித்துள்ளார். இவரின் முதலாவது தொலைக்காட்சி நாடகம் ”நினைவில் மலர்ந்த நிஜம்” ஆகும். இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் தொலைக்காட்சி நாடகங்களையும், 25க்கும் மேற்பட்ட மேடை நாடங்களையும், 30க்கும் மேற்பட்ட சிங்கள தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். ”சறோஜா” (தமிழ்,சிங்களம்), ”அலிபெட்டியா ஒபாய் மமாய்” உட்பட நான்கு சிங்கள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மததெரேசா பகுதி -1, மததெரேசா பகுதி -2 சர்வதேச திரைப்படத்திலும் ரஞ்சனி ராஜ்மோகன் நடித்துள்ளார். மேடை நாடகத்தில் நடித்தமைக்காக துணை நடிகைக்கான விருதினை மூன்று முறையும், சிறந்த நடிகைக்கான விருதினை ஒரு தடவையும் ரஞ்சனி பெற்றுள்ளார். தொடர்ச்சியாக 2007, 2008, 2009ஆம் ஆண்டுக்கான சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதை பெற்றுள்ளமை இவரின் திறமைக்கு மேலும் ஒரு சான்றாகும்.. 2009ஆம் ஆண்டு சிறந்த தொகுப்பாளர், சிறந்த செய்தி வாசிப்பாளரென இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளார். மீண்டும் 2016ஆம் ஆண்டு சிறந்த தொலைக்காட்சி அறிவிப்பாளருக்கான விருதினையும் இவர் பெற்றுள்ளார். ஊடகத்துறையில் தனக்கென தனியான ஓர் இடத்தைப் பெற்றுள்ளார் ரஞ்சனி ராஜ்மோகன்.

குறிப்பு : மேற்படி பதிவு ரஞ்சனி, ராஜ்மோகன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.