ஆளுமை:ரூபி, சித்திரவேல்

From நூலகம்
Name ரூபி
Pages சித்திரவேல்
Pages சிவமணி
Birth 1975.12.25
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர், சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரூபி, சித்திரவேல் (1975.12.25) மட்டக்களப்பு கல்லடியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சித்திரவேல்; தாய் சிவமணி. இராமகிருஸ்ண மகாவித்தியாலயம், இராமகிருஸ்ண கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். கவிதை, நாடகப் பிரதிகள் எழுவதிலும் நடிப்பதிலும் நாடகம் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். ரூபி சித்திரவேலின் நாடகப் பிரதிகள் சமூகம் சார்ந்த நாடகமாக இருப்பது விசேட அம்சமாகும். இவரின் கவிதைகள் உதயசூரியன் நாளிதழில் வெளிவந்துள்ளன. ஆயிரம் கவிஞர்கள் கவிதை புத்தகத்திலும் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது. சமூகசேவையிலும் ஈடுபட்டு வரும் ரூபி ஆலையடிவேம்பு நாவற்காடு கிராமத்தில் மாதர் சங்கத் தலைவியாக இருக்கிறார். அத்துடன் புலம் பெயர் சங்கத்தின் தலைவியாகவும் கண்ணம்மா மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவியாகவும் கிராமிய தொண்டர் தொடர்பாடல் அதிகாரியாகவும் செயற்படுகிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு ரூபி, சித்திரவேல் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.