ஆளுமை:வின்சன் பற்றிக் அடிகளார், டேவிற்

From நூலகம்
Name வின்சன் பற்றிக் அடிகளார்
Pages டேவிற்
Birth 1936.06.07
Place புங்குடுதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வின்சன் பற்றிக் அடிகளார், டேவிற் (1936.06.07 - ) புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை டேவிற். இவர் தனது ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிற் பயின்று தொடர்ந்து ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் கற்று, கொழும்பு சென்று புனித வளனார் குருமடத்திற் சேர்ந்து குருமட மாணவரானார். அங்கு பொதுத் தராதர உயர்தரப் படிப்பினை மேற்கொண்டார். தொடர்ந்து கண்டி அம்பிட்டிய தேசியக் குருமடத்தில் மெய்யியல், இறையியல் பட்டதாரி, றோமாபுரிப் பட்டப்படிப்பில் சித்திபெற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணிப் (பி.ஏ.) பட்டம் பெற்றுக் கொண்டார். இவர் புங்குடுதீவு சவேரியார் ஆலயத்தில் தமது குருத்துவப் பட்டத்துக்காக யாழ்ப்பாண ஆயர் அதி வந்தனைக்குரிய வ.தியோகுப்பிள்ளை ஆண்டகையால் 1981 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 4 ஆம் திகதி திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் புனித சூசையப்பர் குருமாணவப் பயிற்சிக் குருமடத்தில் உதவி அதிபராகவும் விரிவுரையாளராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமையற்றியதுடன் 'நான்' என்ற சஞ்சிகையில் எழுத்தாளராக அறிமுகமாகியதோடு தினகரன் பத்திரிகையில் கத்தோலிக்கச் செய்திகளைத் தற்கால நிகழ்வுகளுடன் எழுதிவந்தார். இவர் குடும்ப உறவுகள் பற்றி 'உறவுகளின் இராகங்கள்' என்ற நூலினை எழுதியுள்ளார். இவர் அமல அன்னை அன்பகம் என்னும் ஒரு சிறுவர் பராமரிப்பு இல்லத்தை ஆரம்பித்துச் செயற்படுத்தினார்.

Resources

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 135-138