ஆளுமை:வீரசிங்கம், நாகலிங்கம்

From நூலகம்
Name வீரசிங்கம்
Pages நாகலிங்கம்
Pages சின்னம்மா
Birth 1928.05.15
Place வேலணை
Category சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீரசிங்கம், நாகலிங்கம் (1928.05.15 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் சின்னம்மா. இவரது இயற்பெயர் துரைச்சாமி. இவர் கல்வியில் காட்டிய திறமை காரணமாக ஆசிரியர் அப்பாத்துரை இவருக்கு வீரசிங்கம் என்னும் பட்டப்பெயரைச் சூட்டினார். காலப்போக்கில் துரைச்சாமி என்ற பெயர் விலகி வீரசிங்கம் என்ற பெயரே நிலைத்து நின்றது.

தான் பிறந்த சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர், வேலணை கிராம முன்னேற்றச் சங்கத்தின் தலைவராக இருந்து மக்களின் நலனுக்காகப் பணியாற்றினார். இவர் 1960 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிராம சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு போக்குவரத்து வீதிகளைத் திருத்தியமைத்தல், வங்களாவடியில் பஸ் தரிப்பிடத்தை அமைத்தல், நீர்ப்பாசனத் தேவையை நிவர்த்தி செய்வதற்கென குளங்ளைப் புனரமைத்து வாய்க்கால்களை அமைத்தல் போன்றவற்றைச் செய்தார்.

இவர் 1986 ஆம் ஆண்டு பண்ணை வீதியில் இராணுவமுகாம் அமைக்கப்பட்டவேளை தீவுப் பகுதி மக்களின் போக்குவரத்து தடைப்பட்ட போது அராலியூடாகப் போக்குவரத்து செய்வதற்கான வீதியமைப்பில் முன்னின்று பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 528-531