ஆளுமை:வீரமணி ஐயர், நடராஜ ஐயர்

From நூலகம்
Name வீரமணி ஐயர்
Pages நடராஜ ஐயர்
Pages சுந்தராம்பாள்
Birth 1931.10.15
Pages 2003.10.08
Place இணுவில்
Category கவிஞர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீரமணி ஐயர், நடராஜ ஐயர் (1931.10.15 - 2003.10.08) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த கவிஞர், கலைஞர். இவரது தந்தை நடராஜ ஐயர்; தாய் சுந்தராம்பாள். இவர் ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும் உயர்கல்வியை மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் கற்றார். இவர் இசை, நடனக் கலைகளில் ஆர்வம் கொண்டு இந்தியாவில் ருக்மணிதேவி அருண்டேலிடம் நடனத்தையும் எம். டி. ராமநாதன், பாபநாசம் சிவன் ஆகியோரிடத்தில் இசையையும் பயின்றார். இவர் இலங்கை திரும்பியதும் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகவும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் விரிவுரையாளராகவும் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் வருகை தரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

கவிபுனையும் ஆற்றல் கொண்ட இவர், ஆலயங்கள் மீது பக்திப் பாமாலைகளையும் திருவூஞ்சல்களையும் கீர்த்தனைகளையும் பாடியுள்ளார். இவர் எழுதிய பாடல்கள் தென்னிந்தியக் கலைஞர்களால் பாடப்பட்டு இறுவெட்டுக்களாக வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 423-425
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 80
  • நூலக எண்: 15220 பக்கங்கள் 32