ஆளுமை:ஷரிபுத்தீன், ஆதாம்பாவா மரைக்கார்

From நூலகம்
Name ஷரிபுத்தீன், ஆ. மு.
Pages ஆதாம்பாவா மரைக்கார்
Pages பாத்திமா
Birth 1909.05.04
Place அம்பாறை
Category கவிஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷரிபுத்தீன், ஆதாம்பாவா மரைக்கார் (1909.05.04 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை ஆதாம்பாவா மரைக்கார்; தாய் பாத்திமா. இவர் மருதானை அரசினர் தமிழ்ப் பாடசலையில் கற்று மாணவ ஆசிரியர் பரீட்சையிலும் ஆசிரியர் பரீட்சையிலும் தேறி ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியதோடு சமாதான நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். ஆசிரியப் பணியின் போது பாடசாலையின் தேவைக்காக மேடை நாடகங்கள் எழுதி நெறிப்படுத்தியதோடு மரபு சார்ந்த ஓவியக் கலையிலும் வல்லவராகத் திகழ்ந்தார். இவரால் உரைச் சித்திரமாக வடிவமைக்கப்பட்ட மட்டக்களப்பு நாட்டுக் கவி 1951 மார்கழியில் இலங்கை வானொலி கலையகத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

நபிமொழி நாற்பது, நாமொழி நாற்பது, முதுமொழி வெண்பா, இசைவருள் மாலை முதலான கவிகளையும் மக்களுக்கு கீதோபதேசம் என்ற காப்பியத்தையும் சீறாபதுறுப் படல உரை, சீறாப் பாதை பாடல்களுக்கான உரை, புதுகுஷ்ஷாம் உரை முதலான உரைநடைகளையும் ஆக்கியுள்ளார். இவரது படைப்புக்களுக்குச் சாகித்திய மண்டல விருது, இலக்கிய மாமணி விருது, கலை ஒளி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவரது ஆளுமையைப் பாராட்டி புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை சாற்றுக்கவி மூலம் புலவர் மணி என்ற பட்டத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Resources

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 42-47
  • நூலக எண்: 10330 பக்கங்கள் 24-25
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 97-98