ஆளுமை:ஷாக்கிறா, தௌபீக் மொஹம்மது முனீர்

From நூலகம்
Name ஷாக்கிறா
Pages யூசுப் இஸ்ஸதீன்
Pages குர்ரத்துல் ஐன்
Birth
Place தர்ஹாநகர்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷாக்கிறா, தௌபீக் மொஹம்மது முனீர் தர்ஹாநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை யூசுப் இஸ்ஸதீன்; தாய் குர்ரத்துல் ஐன். தர்ஹா நகர் அல் ஹம்றாவிலும் பெண்கள் மத்திய கல்லூரியிலும் கல்வி பயின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டதாரியாவார். சீதனம் இன்றளவும் சமூகத்தில் தொடர்ந்திருப்பதற்கு பெண்களே முக்கிய காரணம் என இவர் எழுதிய கவிதை தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. இலங்கையில் வெளியான இலக்கியச் சிற்றிதழ்களிலும் இவரது கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. 1984 இல் அல்ஹஸனாத்தில் வெளியான விடிவு என்ற கவிதையின் மூலம் ஷாக்கிறா என்ற தனது பெயரை ஷாறா என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். கவிதை, கட்டுரைகளை தனது மாணவப் பருவத்திலேயே எழுதி வரும் எழுத்தாளரின் ஆக்கங்கள் அல்ஹஸனாத் சஞ்சிகை, எங்கள் தேசம் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளன. ஃபீனிக்ஸ் பறவைகள் சமூக நாவல் 2006ஆம் வெளியானது. இந்த நூலின் மூன்று பதிப்புகள் ஓராண்டுக்குள் வெளிவந்தன. 2014ஆம் ஆண்டு நான்காவது பதிப்பும் பின்னர் ஐந்தாம் பதிப்பும் வெளியாகியுள்ளது. தூவானம் கட்டுரைத் தொகுதி 2011ஆம் ஆண்டு இரு பதிப்புகள் வெளியாகியுள்ளன. மல்லிகை இதயங்கள் சிறுகதைத் தொகுதி 2012ஆம் ஆண்டு இரு பதிப்புக்கள் வெளியாகியுள்ளது. அல்ஹஸனாத் சஞ்சிகையில் தொடராக வந்த கட்டுரைகள் அருள் மழையில் நனைந்த படி... என்னும் தலைப்பில் நூலாக 2016 இல் வெளியிடப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 9959 பக்கங்கள் 54-56
  • நூலக எண்: 10600 பக்கங்கள் 24-26