ஆளுமை:ஸ்ரலின், இராசேந்திரம்

From நூலகம்
Name ஸ்ரலின்
Pages இராசேந்திரம்
Birth
Place
Category எழுத்தாளர்.
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸ்ரலின், இராசேந்திரம் ஓர் எழுத்தாளர், விரிவுரையாளர். இவரது தந்தை இராசேந்திரம். முதுவிஞ்ஞானமாணி, கலைமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உளவியற் துறை வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளதோடு சிறந்த உள ஆற்றுப்படுத்தல் பயிற்றுனராகவும் உள ஆற்றுப்படுத்துனராகவும் ஆளுமை வளர்ச்சிக் கருத்தரங்குகள் நடத்துனராகவும் விளங்கியுள்ளார். இவரது படைப்புக்களான சிறுகதைகள், ஆங்கில, தமிழ்க் கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புக்கள் என்பன வலம்புரி, உதயன், மன்னா, தாயகம் (கனடா) பத்திதிகைகளிலும் நான், ஜீவநதி, இறையியல் நோக்கு போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.


Resources

  • நூலக எண்: 10204 பக்கங்கள் 19-23