ஆளுமை:ஹமீமா, முகைடீன்

From நூலகம்
Name ஹமீமா
Pages மீராலெப்பை
Pages லைலத்தும்மா
Birth 1952.03.20
Place சம்மாந்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹமீமா, முகைடீன் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மீராலெப்பை; தாய் லைலத்தும்மா. ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது கருவாட்டுக்கல் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கல்முனை மகளிர் வித்தியாலயத்திலும் கல்முனை மத்தியக் கல்லூரியிலும் கற்றார். சம்மாந்துறை கனிஷ்ட தொழில்நுட்பக் கல்லூரியில் வியாபாரக் கற்கை நெறியில் சித்தியடைந்துள்ள இவர் கல்முனையைச் சேர்ந்த முகம்மது இப்றாஹிம் முகம்மது முகைடீன் என்பவரை திருமணம் செய்தார். நான்கு பிள்ளைகளின் தாயாவார். 1979ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்ற இவர் கலைமாணிப் பட்டம், கல்விமாணிப்பட்டம் ஆகிய பட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார். தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

கவிதை, கட்டுரை, துணுக்குகள், சிறுகதை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, ஆசிரியர் கலாசாலையின் கலை அமுது, வானொலி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. நாடகப் பிரதிகளையும் இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய பல நாடகப் பிரதிகள் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியின் ஊடாக ஒலிபரப்பாகியுள்ளது.