ஆளுமை:ஹென்றி மார்ட்டின்

From நூலகம்
Name ஹென்றி மார்ட்டின்
Birth 1811
Pages 1861.03.31
Place சுண்டுக்குளி
Category ஆசிரியர், பத்திரிகையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹென்றி மார்ட்டின் (1811 - 1861.03.31) யாழ்ப்பாணம், சுண்டுக்குளியைச் சேர்ந்த ஆசிரியர், பத்திரிகையாளர். இவரது இயற்பெயர் கிறிஸ்தோபர். இவர் தனது தொடக்கக் கல்வியைத் தெல்லிப்பளை அமெரிக்க மிசன் பாடசாலையிலும் பின்னர் வட்டுக்கோட்டை செமினறியிலும் கற்று அதே நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார்.

இவர் 1941 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதற் தமிழ்ப் பத்திரிகையும் யாழ்ப்பாணத்தின் முதற் செய்திப் பத்திரிகையுமான உதயதாரகையின் முதல் ஆசிரியராகப் பணி புரிந்தார். இருமொழிப் பத்திரிகையான இதில் இவர், ஆங்கிலப் பிரிவின் ஆசிரியர் ஆவார். இவர் 1843 இல் வட்டுக்கோட்டைச் செமினரியில் இருந்து விலகி, அரசாங்கக் களஞ்சியப் பொறுப்பாளரானதுடன் உயர் நீதிமன்ற வழக்குகள் நடைபெறும் காலங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

இவர் எஸ்தார் விலாசம், யாழ்ப்பாணக் குறிப்புக்கள், யாழ்ப்பாண ஆசனக் கோவிலின் வரலாறு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது பெயரினைக்கொண்டதாய் யாழ்ப்பாணத்தில் ஒரு வீதி அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 51
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 82-89