ஆளுமை: விமலா ஆறுமுகம்

From நூலகம்
Name விமலா
Pages -
Pages -
Birth -
Pages -
Place -
Category அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி விமலா ஆறுமுகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் ஏழாவது அதிபராவார். இவர் ஆசிரியராயிருந்து அதிபராய் உயர்ந்தவர். மிக நீண்டகாலம் கல்லூரியில் அதிபராயிருந்தவரும் இவரே. இவர் காலத்தில் கல்லூரி தரம் I பாடசாலையாயிருந்தது. இவர் காலத்தில் பெருமளவான மாணவர்கள் பெரதெனிய பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் சென்றனர். அறுபதுகளின் ஆரம்பத்தில் இந்துக்கல்லூரி அதிகார சபையிலிருந்து கல்வித் திணைக்கள ஆளுகையின்கீழ் பாடசாலை மாற்றம் பெற்றபோது அம்மாற்றத்தை சிறப்பாய் கொண்டு சென்றார். பல கலை நிகழ்ச்சிகளுடு பணம் திரட்டி பாடசாலையின் மேம்பாட்டுக்கு முன்னின்று உழைத்தார். இப்பணம் விசாலாட்சி சிவகுருநாதர் அவர்கள் பெயரில் ஒரு பிரார்த்தனை மண்டபத்தை உருவாக்க பயன்பட்டது.