ஆளுமை:அப்துல் காதிர் புலவர், அல்லா பிச்சை ராவுத்தர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:04, 26 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் காத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் காதிர், அல்லா பிச்சை ராவுத்தர்
தந்தை அருள்வாக்கியர்
பிறப்பு 1866
இறப்பு 1918
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்தில் காதிர் (அப்துல் காதிர் அருள்வாக்கியர்) (1866 - 1918) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அல்லா பிச்சை ராவுத்தர்; தாய் ஹவ்வா உம்மா. இவர் கண்டியிலுள்ள இராணி கல்லூரியில் (இப்போது திரினிற்றிக் கல்லூரி) தமிழும் ஆங்கிலமும் பயின்ற பின், தென்னிந்தியாவுக்குச் சென்று திருப்பத்தூர் தமிழ் வித்தியாசாலைத் தலமையாசிரியராக விளங்கிய வித்துவசிரோமணி முகமது முமுத்துபாவாப் புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையே கற்றுக் கொண்டார்.

இவர் தமது பதினோறாவது வயதில் கவியரங்குகளிற் கலந்து யாழ்ப்பாண சங்கன், மெய்ஞ்ஞான அருள் வாக்கி என சிறப்புப் பெயர்கள் பெற்றார். கண்டிக் கலம்பகம், கண்டிப் பதிற்றுப்பத்தந்ததி, கண்டி நகர்ப்பதிகம், சலவாத்துப் பதிகம், தேவாரப் பதிகம், பதாயிகுப் பதிகம், பிரான் மலைப் பதிகம், திருபகுதாதந்தாதி, மெய்ஞ்ஞானக் குற வஞ்சி, மெய்ஞ்ஞானக் கோவை, கோட்டாற்றுப் புராணம், உமரொலியுல்லா பிள்ளைத் தமிழ், காரணப் பிள்ளைத் தமிழ், சித்திர கவிப் புஞ்சம், பிரபந்த புஞ்சம், ஆரிபுமாலை, பேரின்ப ரஞ்சித மாலை, ஞானப் பிரகாச மாலை, பிதுமொழி மாலை, திருமதீனத்துமாலை, வினோதபத மஞ்சரி, நவமணித் தீபம், சந்தத் திருப்புகழ் போன்ற நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 08