ஆளுமை:அல்பேட் இதயமனோகர், பசுபதி

From நூலகம்
Name அல்பேட் இதயமனோகர்
Pages பசுபதி
Birth 1955.11.02
Place மட்டக்களப்பு, தேற்றாத்தீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அல்பேட் இதயமனோகர், பசுபதி (1955.11.02 - ) மட்டக்களப்புத் தேற்றாதீவினைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராசகோபால் பசுபதி. இவர் தேற்றாத்தீவு றோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலையிலும், மட்டக்களப்பு மத்திய கல்லூரி, தூய மிக்கேல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். அத்தோடு வன்கூவர் பிறேசர் வளாகத்தில் அச்சுக்கலை டிப்ளோமாவையும், தொரன்றோவில் பிரயாண முகவர் டிப்ளோமாவையும் முடித்தார்.

இவர் பல பத்திரிகைகளில் கதை, கவிதை என்பவற்றை எழுதியுள்ளதோடு மனோலயம், மனோவின் குறும்புப் பா, பேச்சுத் தமிழ் Spoken English நூல் ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 181