ஆளுமை:ஆதம்பாவா, அப்துல் காதர்

From நூலகம்
Name ஆதம்பாவா
Pages அப்துல் காதர்
Birth 1943.10.18
Pages 2020.04.13
Place சாய்ந்தமருது
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆதம்பாவா, அப்துல் காதர் (1943.10.18 - 2020.04.13) சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு கலைஞர் ஆவார். இவரது தந்தையின் பெயர் அப்துல் காதர். இவர் இனிமையான குரலில் பாடக்கூடிய ஒரு கலைஞர் ஆவார் அதிலும் உசைன் பக்கீர் பைத் எனும் வழிபாட்டுப் பாடலில் மிகப் பிரசித்தமானவராவார்.

கலாசாரத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட பல றபான் இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசில்களை வென்றவர். மருதம் தக்வா கோலாட்டக் குழு என்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பினை உருவாக்கி வழிநடாத்திய இவர் பொல்லடிக் குழுவிற்குத் தலைவராகவும் அண்ணாவியாகவும் இருந்து பொல்லடிக் கலையை முன்னெடுத்து வந்தார். அத்தோடு பொல்லடிக் கலையை இளம் சமுதாயத்தின் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பாடசாலை மாணவர்களிலிருந்து பல பொல்லடிக் குழுக்களை உருவாக்கினார்.

பக்கீர் பாவாக்களின் கலீபாப் பட்டம் பெற்ற இவர் கலாபூசணம் விருது, கிழக்கு மாகாணதத்தின் முதியகலைஞர் என்று உயர் விருது போன்ற விருதுகளைப் பெற்றதோடு சான்றிதழ்கள் பாராட்டுக்கள் பல பெற்ற இவர் 13.04.2020 ம் திகதி காலமானார்.