"ஆளுமை:ஆறுமுகநாவலர், கந்தப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:ஆறுமுகநாவலர், ஆளுமை:ஆறுமுகநாவலர், கந்தப்பிள்ளை என்ற தலைப்புக்கு நகர்த்த...)
வரிசை 29: வரிசை 29:
 
{{வளம்|963|23-29}}
 
{{வளம்|963|23-29}}
 
{{வளம்|4485|04}}
 
{{வளம்|4485|04}}
 
+
{{வளம்|13816|56-64}}
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

03:16, 11 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆறுமுகநாவலர், கந்தப்பிள்ளை
தந்தை கந்தப்பிள்ளை
தாய் சிவகாமி அம்மையார்
பிறப்பு 1822.12.18
இறப்பு 1879.12.05
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஆறுமுகநாவலர் (1822.12.18-1879) யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றிய சமயப்பெரியார், பதிப்பாளர், சொற்பொழிவாளர். தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். இவரது தந்தை கந்தப்பிள்ளை; தாய் சிவகாமி. இவரது இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை. ஐந்து வயதில் வித்தியாஆரம்பம் செய்யப்பட்டு நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாரிடம் ஆரம்பக்கல்வியையை பெற்றதோடு நீதிநூல்களையும் கற்றறிந்துகொண்டார். சரவணமுத்துப்பிள்ளையிடமும் செனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வியை பெற்று சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றில் பாண்டித்தியம் பெற்று விளங்கினார். யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கிலப்பாடசாலையில் ஆங்கிலக்கல்வியையும் பெற்றுக்கொண்டார்.

தனது இருபதாவது வயதில் தான் கற்ற பாடசாலையிலேயே ஆசிரியராக பணியேற்றதோடு அப் பாடசாலை நிறுவுனர் பேர்சிவல் பாதிரியாரின் கிறிஸ்தவ வைபிளை தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிக்கு உறுதுணையாக செயற்பட்டார். அக்காலத்தே யாழ்ப்பாணத்தின் சமயநிலையினை கருத்திற்கொண்டு சைவத்திற்கும் தமிழ் பண்பாட்டிற்கும் இசைவான கல்வியை வழங்க எண்ணி பதிப்பு முயற்சியிலும், பிரசங்க நிகழ்விலும் ஈடுபடத்தொடங்கினார்.

வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவி சமயக்கல்வி புகட்டியதோடு தனது வீட்டிலேயே வித்தியானுபால யந்திரசாலையை நிறுவி ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, நன்னூல் விருத்தி உரை, திருமுருகாற்றுப்படை உரை, பெரியபுராணம் முதலான நூல்களை பதிப்பித்து வெளியீடு செய்தார். இவரது பதிப்புக்கள் பிழைகள் ஏதுமற்ற சுத்தப்பதிப்பாக விளங்கின.

பாடநூல்களை அச்சிடும்பொருட்டு 1849ஆம் ஆண்டில் சென்னை சென்றிருந்தவேளை திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிர்சங்கம் செய்து தனது ஆளுமையை வெளிப்படு 'நாவலர்' என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 67 பக்கங்கள் 05-35
  • நூலக எண்: 100 பக்கங்கள் 184
  • நூலக எண்: 209 பக்கங்கள் 63-64
  • நூலக எண்: 276 பக்கங்கள் 133
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 51-58
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 07
  • நூலக எண்: 963 பக்கங்கள் 23-29
  • நூலக எண்: 4485 பக்கங்கள் 04
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 56-64

வெளி இணைப்புக்கள்