ஆளுமை:ஆறுமுகம், கந்தையா

From நூலகம்
Name ஆறுமுகம்
Pages கந்தையா
Pages லட்சுமிபிள்ளை
Birth 1944.07.02
Place தம்பகாமம்
Category கூத்து கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம், கந்தையா (1944.07.02 -) பூநகரி,தம்பகாம எனும் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட காத்தவராயன் கூத்துக்கலைஞர் ஆவார். இவரது தந்தை பொன்னுச்சாமி;தாய் லட்சுமிபிள்ளை ஆகியோர் ஆவர்கள். ஆரம்பகால கூத்துக்கலைகளை பளை இரட்டைக்காளி அம்மன் கோவிலில் 1963 - 1966 காலப்பகுதிகளில் அரங்கேற்றினர். 1971 ஆம் ஆண்டில் இருந்து இவர் அண்ணாவியராக செயல்பட தொடங்கினார். நெறியாய் அம்மன் கோவிலில் இவரது முதலாவது மேடையேற்றம் நடைபெற்றது. கொடிகாமம், கச்சாய், அல்வாய், குழலடிப்பிள்ளையார், நெல்லண்டைபத்திரகாளி, மாமுனை நாகதம்பிரான், கச்சர்வெளிப்பிள்ளையார், நவினி வெளி அம்மன், அறத்தி அம்மன், அல்லிப்பளை, தம்பகாமம், மண்டான், புலோப்பளை மேற்குபெரியபளை, முல்லையடி, வண்ணாங்கேணி, சின்னத்தாளையடி, இயக்கச்சி, எச்சாட்டி, றட்பானா, அக்கராயன், 5ம் கட்டை, யோகபுரம், என்பன போன்ற பளை தவிர்ந்த வெளியிடங்களிலும் சென்று 132 தடவைகளுக்கு மேல் காத்தவராயன் கூத்தினை மேடையேற்றியுமுள்ளார்.

உடுக்கை,ஆர்மோனிய கலைஞராக திகழ்ந்த இவரின் சேவையை பாராட்டி, பல்வேறு நிறுவனங்களால் 1997ஆம் ஆண்டு எழுதுமட்டுவாள் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டு பேரவையாலும், 2001 இல் பிரதேசசெயலகம் பச்சிலைப்பள்ளியாலும் சிறந்த அண்ணாவியராக கெளரவிக்கப்பட்டார். அத்துடன் 2011 கலைத்தென்றல் விருதும், அதே ஆண்டில் கலைக்கிளி விருதும் , 2013 ஆளுனர் விருதும் அதே ஆண்டில் கலாபூசணம் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.