ஆளுமை:இராசா, கந்தசுவாமி

From நூலகம்
Name இராசா
Pages கந்தசுவாமி
Pages சுப்புலஷ்மி
Birth 1907.02.10
Pages 1994.01.01
Place மாவிட்டபுரம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசா, கந்தசுவாமி (1907.02.10 - 1994.01.01) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கந்தசுவாமி; தாய் சுப்புலஷ்மி. இவர் நாதஸ்வர இசையைத் தனது உறவினரும், தேவஸ்தான வித்துவானும் ஆகிய குழந்தைவேலு என்பவரிடம் கற்றார். இவரது நாதஸ்வர வாசிப்பானது ஸ்வரசுத்தமும், லயசுத்தமும், விவகாரமும், பிர்கா சங்கதிகளும் நிறைந்த சுகமுடையதாகும்.

இவரது இசையானது ஈழநாட்டின் பல ஊர்களிலும், பிரபல்யமான ஆலயங்கள் தோறும் நடைபெற்று வந்துள்ளது. அக்காலத்தில் அளவெட்டி எஸ்.பி.எஸ்.திருநாவுக்கரசு, ஆச்சாள்புரம் சின்னத்தம்பி, மாவிட்டபுரம் எம்.எஸ்.சண்முகநாதன், திருப்பங்கூர் இராமையா, கலாசூரி என்.கே.பத்மநாதன் போன்ற நாதஸ்வர கலைஞர்கள் இவருடன் இணைந்து வாசித்து வந்துள்ளார்கள்.

Resources

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 31-34