ஆளுமை:இராஜகுமாரி, சோதிநாதன்

From நூலகம்
Name இராஜகுமாரி
Pages சோதிநாதன்
Birth 1944.04.17
Place மட்டக்களப்பு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜகுமாரி, சோதிநாதன் (1944.04.17) மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். வாய்ப்பாட்டிலும், வயலினிலும் சங்கீத கலாவித்தகர் பட்டம் பெற்றதுடன் இலங்கையில் முதல் முதலில் சித்தார் வாத்தியத்தில் சங்கீத கலாவித்திகர் பட்டமும் பெற்றுள்ளார். திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றி மட்டக்களப்பு கல்விக் கல்லூரி பகுதி நேர ஆசிரியராகவும், மட்டக்களப்பு தொலைக்கல்வி போதனா ஆசியராகவும் கடமையாற்றியுள்ளார்.

கல்வி பொதுத்தராதர சாதாரணதர மாணவர்களுக்கான வினாவிடை 1ஆம், 2ஆம் (பகுதிப்) புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார். தேசிய கல்வி நிறுவனத்தில் 1963-2011வரை ஆசிரியர் கைநூல் தயாரிப்பில் ஓர் அங்கத்தவராக இருந்துள்ளார்.

சங்கீத ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும், சங்கீத சேவைக்கான ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். தட்சணகான சபையை ஆரம்பித்து சங்கீத சேவை செய்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 8470 பக்கங்கள் 53