ஆளுமை:இராஜேஸ்வரி, சிவராஜா

From நூலகம்
Name இராஜேஸ்வரி, சிவராஜா
Pages வல்லிபுரம்
Pages பார்வதி
Birth
Place உரும்பராய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜேஸ்வரி, சிவராஜா. யாழ்ப்பாணம், உரும்பராயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லிபுரம்; தாய் பார்வதி. இவர் தனது ஆரம்பக் கல்வியை உரும்பராய் சர்வோதய வித்தியாசாலையிலும், உயர்கல்வியைச் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் பயின்றார். 1984 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்றார். 1990 முதல் 1994 வரை ஜேர்மனி டியுஸ்பேர்க் நகரில் இயங்கி வந்த தமிழ்ப் பாடசாலையில் தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

1992 ஆம் ஆண்டிலிருந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இவர், ஜேர்மனியில் வெளிவந்த ஈழம், தமிழருவி ஆகிய பத்திரிகைகளிலும், மண், சிறுவர் அமுதம், பூவரசு முதலான சஞ்சிகைகளிலும் ஆக்கங்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.

Resources

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 107-110
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 104-106