"ஆளுமை:இராமனாதன், சோமசுந்தரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராமனாதன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:21, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராமனாதன்
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு 1923.10.07
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமனாதன், சோமசுந்தரம் (1923.10.07 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை சோமசுந்தரம். தனது பதினான்காவது வயதிலிருந்து நாதஸ்வரக் கலையில் ஈடுபட்டிருந்த இவர் பக்கிரிசாமிப்பிள்ளை, உருத்திராபதி, நடராஜா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் பயின்றார்.

இவர் தந்தை செல்வாவுடன் இணைந்து மாவிட்டபுரத்தில் இலவசப் பாடசாலை ஒன்றை அமைத்து மாணவ்சர்களுக்கு இசை கற்பித்தார். யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட இசைக் கச்சேரிகளிலும், நல்லூர் கந்தன், மாவைக் கந்தன், யாழ்ப்பாண சிவன் உட்பட பல்வேறு ஆலயங்களிலும் இவர் தனது நாதஸ்வர கச்சேரிகளை நிகழ்த்தினார். ஈழநாடு, தினபதி, உதயன் போன்ற பத்திரிகைகளின் செய்தியாளராக இருந்ததுடன் இசையாளன் என்ற மாத சஞ்சிகை ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக சமூகத் தொண்டன், கலாபூஷணம், கலைஞானகேசரி, ஸ்வரஞான கலாமணி, இசைஞான வாரிதி ஆகிய பட்டங்களை இவர் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 84