ஆளுமை:இளையகுட்டி, வேலன்

From நூலகம்
Name இளையகுட்டி
Pages வேலன்
Birth 1937.08.02
Place ஆவரங்கால்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளையகுட்டி, வேலன் (1937.08.02 - ) யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை வேலன். 40 வருட காலமாக ஆசிரியராகக் கடமையாற்றி வந்த இவர், புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்த கல்லூரி, கோப்பாய் பிரதேச கலாச்சாரப் பேரவை, கோண்டாவில் வாகீஸ்வரி சனசமூக நிலையம் போன்ற இடங்களில் தனது நாடகத்தை ஆற்றுகைப்படுத்தி வந்துள்ளார்.

இவரது திறமைக்குப் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மன்றம், உதயன், நிதர்சன், ஈழநாதன் போன்ற ஊடகங்கள் இவருக்குப் பரிசில்களை வழங்கி பாராட்டியுள்ளதோடு, இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞான கேசரி என்ற பட்டமும், வலிகாமம் கிழக்குப் பிரதேச பண்பாட்டுப் பேரவையினால் 2008 இல் செம்புலக் கலைஞர் என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 135