ஆளுமை:இவாஞ்ஜெலின், அழகரட்ணம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:09, 30 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இவாஞ்ஜெலின் யோகமணி
தந்தை தோமஸ் போகே ஹன்ற்
தாய் இரட்ணமலர்
பிறப்பு 1941.10.31
ஊர் யாழ்ப்பாணம்
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இவாஞ்ஜெலின், அழகரட்ணம் யாழ்ப்பாணத்தில் பிறந்த சமூகசேவையாளர். இவரது தந்தை தோமஸ் போகே ஹன்ற்; தாய் இரட்ணமலர். ஆரம்ப கல்வியை உடுவில் மகளிர் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை கண்டி நல்லாயன் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் கற்றார். தாதியர் கல்வியை இங்கிலாந்தில் முடித்துள்ளார். 1975ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். 2005ஆம் ஆண்டு Degree of fine Art கற்றார். 2009ஆம் ஆண்டு இவரின் முதலாவது ஓவியக் கண்காட்சியை நடாத்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக ஓவியக் கண்காட்சியை அமெரிக்காவில் நடாத்தினார். இவரின் ஓவியக் கண்காட்சியின் ஊடாக வரும் பணத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு தேவையான சித்திர உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வந்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஓவியக் கூடம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால் தென்னமராட்சி ரி.பி.ஹன்ற் ஞாபகார்த்த ஓவியக்கூடத்தினை இவரின் தந்தையாரின் நினைவாக கட்டி 2018ஆம் ஆண்டு ஜுன் 24ஆம் திகதி திறந்து வைத்தார். இந்த ஓவியக்கூடத்தினால் மாணவர்களுக்கும், ஓவியத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் உதவியாக இருக்கிறது. அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினரான இவர் அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தினால் வெளியிடப்படும் நூலில் இவரின் கட்டுரைகள் தொடர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


குறிப்பு : மேற்படி பதிவு இவாஞ்ஜெலின், அழகரட்ணம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.