ஆளுமை:இஸ்மத் பாத்திமா, எஸ்.ஏ

From நூலகம்
Name இஸ்மத் பாத்திமா, எஸ்.ஏ
Pages செய்யத் அஹமட்
Pages றஹுமா உம்மா
Birth 1974.10.11
Place குருணாகல்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இஸ்மத் பாத்திமா, எஸ்.ஏ (1974.10.11) குருணாகல் பானகமுவவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அல்ஹாஜ் ஏ.சி.செய்யது அஹமது; தாய் மர்ஹும் கே.ரீ.றஹுமா உம்மா. இவரின் கணவர் எம்.ஏ.முஹம்மது றிப்தி தர்கா நகர் ஆசிரியர் வாண்மை மத்திய நிலையத்தின் முகாமையாளர் ஆவார். இவருக்கு ஒரு மகன் அகீல் அஹமட் தரம் ஐந்தில் கல்வி கற்கிறார். பானகமுவ அந்நூர் முஸ்லிம் மகாவித்தியாலயம், நாம்புளுவ,பசியாலை பாபுஸ்ஸலாம் முஸ்லிம் மகாவித்தியாலயம், மடவளை மதீனா தேசிய கல்லூரி போன்ற பாடசாலைகளில் கல்வி கற்றார். களுத்துறை பஸ்துன்ரட்ட தேசிய கல்விக் கல்லூரியில் மூன்று வருட கற்கையான ஆங்கிலம் கற்பித்தலுக்கான தேசிய டிப்ளோமா” திறமைச் சித்தி பெற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழத்தில் கலைமாணி சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார். ஆங்கில ஆசிரியர் சேவையை பல பாடசாலைகளில் தொடர்ந்த எழுத்தாளர் ஆங்கில ஆசிரிய ஆலோசகராகவும் பிரதி அதிபராகவும் அதிபராகவும் பல பாடசாலைகளில் சேவையாற்றி தற்பொழுது பேருவளை மே/மா/களு/ சீனன்கோட்டை ஆரம்ப பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகின்றார். ”இரண்டும் ஒன்றும்” என்ற கவிதைத் தொகுதியின் ஊடாக எழுத்துத்துறைக்குப் புிரவேசித்துள்ளார். ”சற்று பொறு பாலிகா”, ”உயர் கல்விக்கு அனுமதி தாரீர்” ஆகிய தலைப்பில் பாடசாலை சம்பந்தமான கவிதைகளை வெளியிட்டுள்ளார். இவரின் கவிதைகள் பாடசாலையின் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக இருப்பதோடு சமகாலத்தில் கவனத்தை ஈர்த்த விடயங்களைத் தனது கவிதைக்குத் தலைப்பிட்டுள்ளார். வெள்ளம், டெங்கு, மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவு, காலஞ்சென்ற அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர், இயற்கை, பெண்ணியம் என்ற தலைப்புக்களை இவரின் கவிதைகள் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும். இவரது கவிதைகள் தினகரன், சுடர்ஒளி, விடிவெள்ளி, மெட்ரோ நியூஸ் பத்திரிகைகளிலும் அல்ஹஸனாத், ஞானம், பூங்காவனம் போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை இலக்கிய மன்றம், இணையத்தளம், லண்டன் முஸ்லிம் குரல் ,வளம்பிறை சஞ்சிகை, நிகழ்ச்சி போன்ற ஊடகங்களின் ஊடாகவும் இவரது கவிதைகள் இடம்பெறுகின்றன. இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை செய்தி மஞ்சரிப் பகுதியில் பல உரைகளை நிகழ்த்தி வருகிறார். தினகரன் பத்திரிகையில் ஆலமுல் இஸ்லாம் பகுதியில் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு இஸ்மத் பாத்திமா, எஸ்.ஏ அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.