ஆளுமை:உதயகுமார், எம்.

From நூலகம்
Name உதயகுமார்
Birth
Place புங்குடுதீவு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயகுமார், எம். யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த கலைஞர். தனது 13 ஆவது அகவையில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், கிங்ஸ்லி எஸ். செல்லையா தயாரித்த தாலிக்கொடி, மலர்ந்தும் மலராத ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து 1966 ஆம் ஆண்டில் கடமையின் எல்லை என்ற தமிழ்த் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதுவே இவர் நடித்து வெளிவந்த முதல் படமாகும். 1970 இல் வெளியான மஞ்சள் குங்குமம் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக உதயகுமார் நடித்தார். இவ்வாறு பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 103-106