"ஆளுமை:உமறு நெய்னாப் புலவர், மதார்ஸா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:உமறு நெய்னாப் புலவர், மதார்ஸா ஹஜ்ஜும்மா, [[ஆளுமை:உமறு நெய்னாப் புலவர், மதா...)
(வேறுபாடு ஏதுமில்லை)

03:18, 2 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் உமறு நெய்னாப் புலவர்
தந்தை மதார்ஸா
தாய் ஹஜ்ஜும்மா
பிறப்பு 1907.12.08
ஊர் மூதூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உமறு நெய்னாப் புலவர், மதார்ஸா (1907.12.08 - ) மூதூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மதார்ஸா; தாய் ஹஜ்ஜும்மா. மூதூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்ற இவர், 1939.05.04 இல் ஆசிரியராக நியமனம் பெற்று மூதூர், கிண்ணியா, சம்பூர், தோப்பூர் ஆகிய இடங்களில் கடமையாற்றியுள்ளார்.

இவர் பல ஊர்களில் மேடை அமைப்பித்து இலக்கிய பாராயண நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரும் இவரது நண்பராகிய சவரிமுத்துப் புலவரும் ஓய்வுநேரத்தில் செய்யுள் வகையிலே சிலேடை, மடக்கு, நாகபந்தம் போன்ற சித்திரக் கவிகளைக் கற்றுத் தேறினர். இவர் புகாரிக் காவியம் என்னும் நாப்பதொன்பது கலிவிருத்தப் பாக்களாலான ஒரு நூல் செய்துள்ளார். மேலும் வெண்பா யாப்பில் நபி மொழிகள் நூலை ஆக்கியுள்ளார். இது 13 பாடல்களைக் கொண்டது. மேலும் பெண்கல்வி எனும் தலைப்பில் ஏழு பாடல்களும், இஸ்லாமிய குறள் என்ற தலைப்பில் பத்து குறட்பாக்களும், அரேபிய நாட்டின் அன்றைய நிலை என்னும் தலைப்பில் பன்னிரண்டு விருத்தங்களும் செய்துள்ளதோடு பத்துக் குறட்பாக்களை சோபனம் என்னும் தலைப்பில் எழுதியுமுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 221-223