ஆளுமை:கங்காதரன், மயில்வாகனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கங்காதரன்
தந்தை மயில்வாகனம்
பிறப்பு 1910
இறப்பு 1994
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கங்காதரன், மயில்வாகனம் (1910 - 1994) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை மயில்வாகனம். இவர் சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணியதோடு திருவுருவங்களைக் கண்ணாடியில் வரைவதில் பெயர் பெற்று விளங்கியவர். இவர் கொழும்பு தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்றதோடு, திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் சிறிதுகாலம் கைப்பணிப் போதனாசிரியராகக் கடமையாற்றினார். இவர் எஸ். ஆர். கனகசபை பரமேஸ்வராக் கல்லூரியின் ஆசிரியராகக் கடமையாற்றிய போது அவரிடம் தன் ஆரம்பகால ஓவியப் பயிற்சியைப் பெற்றார்.

தெய்வத் திருவுருவங்கள் வரைதல், கோயிற் திரைச்சீலைகள் வரைதல், கண்ணாடியில் வரைதல் எனச் சமயம் சார்ந்த ஓவியக்கலையில் ஈடுபட்டு அதனையே தன் சீவனோபாயத் தொழிலாகக் கொண்டதால் தனது ஆக்கங்கள் எதனையும் சேகரிப்பில் வைத்திருக்கவில்லை. கோப்பாய் கந்தசுவாமி கோயில், நீர்வேலி கந்தசுவாமி கோயில் தேர்மூட்டி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கோபுரவாயில், தேர்முட்டிக்கருகாமையில் உள்ளமடம் என்பவற்றிலுள்ள சுவரோவியங்கள் இவரால் வரையப்பட்டவை.

கொழும்பு கலாபவனத்தில் இவரது விநாயகர் திருவுருவச் திரைச்சீலையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மரபுவழி ஓவியத்தில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களில் முதலிடத்தைப் பெறுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 20-21

வெளி இணைப்புக்கள்